search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாஸ்தா கோவில்"

    நாகர்கோவில், வடசேரி டிஸ்டிலரி ரோட்டில் மிகவும் பழமையான பூதம் வணங்கும் கண்டன் சாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
    நாகர்கோவில், வடசேரி டிஸ்டிலரி ரோட்டில் மிகவும் பழமையான பூதம் வணங்கும் கண்டன் சாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

    கும்பாபிஷேக விழா நேற்று தொடங்கியது. காலை 6 மணிக்கு விக்னேஷ்வரர் பூஜை, 9.30 மணிக்கு சுதர்சன ஹோமம், மாலை 3.45 மணிக்கு ஒழுகினசேரி ஆறாட்டு துறையில் இருந்து புனித நீர் எடுத்து, யானை மீது ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அதைத்தொடர்ந்து 6.30 மணிக்கு வாஸ்து ஹோமம், இரவு 8 மணிக்கு முதலாம் கால யாக சாலை பூஜை நடந்தது. இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜை, நள்ளிரவு 11 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை ஆகியவை நடைபெறுகிறது.

    நாளை காலை 6 மணிக்கு மங்கள இசை, 6.30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 9 மணிக்கு பிம்ப சுத்தி, தீபாராதனை, கடப்பிரதஷனம் ஆகியவை நடைபெறுகிறது. 9.15 மணிக்கு மூலஸ்தான மூர்த்திகள், பரிவார தேவதை விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. 10.30 மணிக்கு அபிஷேகம், 11 மணிக்கு அலங்கார தீபாராதனை, 11.30 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை, கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்களின் அதிகாரிகள் உதவியுடன் பூதம் வணங்கும் கண்டன் சாஸ்தா கோவில் திருப்பணிக்குழு மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர். 
    ×